close
Choose your channels

'சூரரை போற்று' இந்தி ரீமேக்கின் டிரைலர்.. ஒரே ஒரு காட்சியில் சூர்யா.. வைரல் வீடியோ..!

Tuesday, June 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் தமிழில் ‘சூரரை போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் டைட்டில் ’சர்ஃபைரா’ என்றும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டு நிமிடத்திற்கு மேலான ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகளை பார்க்கும் போது கிட்டத்தட்ட ‘சூரரை போற்று’ படத்தில் உள்ள காட்சிகள் தான் உள்ளது என்பதும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் ஒரு சில நொடிகள் வரும் காட்சியும் இந்த ட்ரெய்லரில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சூரரை போற்று’ திரைப்படம் ஹிந்தியிலும் வெற்றி பெறும் என்று இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அக்ஷய் குமார், பரேஷ் ராவல், ராதிகா மேடன், சீமா பிஸ்வாஸ், சரத்குமார், சவுரப் கோயல், கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.