விஜய் அந்தோணியுடன் இணைந்து சரிகம வழங்கும் இசை விருந்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமேசான் பிரைம் மியூசிக் மற்றும் சரிகம இணைந்து ’கார்வான் லவுஞ்ச் தமிழ் சீசன் 1’ என்ற இசை வீருந்து ஒன்றை தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஏற்பாடு செய்துள்ளது. இதில் 7 வெற்றி பெற்ற தமிழ் பாடல்கள் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளது
இசையில் சிறந்த திறமைகளைக் கொண்டிருக்கும் 7 பேர் தனித்துவமான இசைக் கருவிகளுடன் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. அதேபோல் முன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடவுள்ளனர். கார்வன் லவுஞ்ச் தமிழ் சீசன் 1 பாடல்கள் அமேசான் பிரைம் மியூசிக் பிரைம் உறுப்பினர்கள் பிரத்யேகமாக ரசிக்கலாம்.
இதில் முதல் பாடலாக இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி மிகவும் புகழ் பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி’ என்ற பாடலை மறுவடிவமைப்பு செய்துள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலின் மறு வடிவமைப்பு சமீபத்தில் வெளியாகி இசை ரசிகர்களுக்கு இசை விருந்தாகியது. இந்த பாடலை விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியுள்ளார்.
இதேபோல் இன்னும் 6 பாடல்கள் உருவாகவிருக்கின்றது. ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் சத்யா இசையமைப்பில் சூரஜ் சந்தோஷ், சைந்தவி பாடவுள்ளனர். ‘கண்ணால பேசி பேசி’ பாடல் அருள்தேவ் இசையமைப்பில் விஜய் பிரகாஷ் பாடவுள்ளனர். ‘உன்னை காணாத கண்ணும்’ பாடல் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில் தான்வி ஷா பாடவுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் ராஜேஷ் வைத்யா மற்றும் கார்த்திக் இசையமைப்பில் கார்த்திக் பாடவுள்ளார். ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடல் தரண்குமார் இசையமைப்பில் சத்யபிரகாஷ் மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ராமன் பாடவுள்ளனர். மற்றும் ‘குங்குமப்பூவே’ என்ற பாடல் நவீன் இசையமைப்பில் நவீன் மற்றும் சின்மயி பாடவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com