ஜூலை 1 முதல் கோலாகலமாக தொடங்கும் சரிகமப லிட்டில் சேம்ப்: முதல் வார ஸ்பெஷல் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜூலை 1 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சேம்ப் கோலாகலமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சரிகமப. சீனியர்களுக்கான இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக புருஷோத்தமன் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜூலை 1 முதல் சரிகமப நிகழ்ச்சியின் லிட்டில் சேம்ப் சீசன் 3 கோலாகலமாக தொடங்க உள்ளது.
எக்கச்சக்கமான குழந்தைகள் இந்த நிகழ்ச்சியின் ஆடிஷனில் பங்கேற்க 20 முதல் 25 திறமையான போட்டியாளர்களை மெகா ஆடிஷன் மூலம் தேர்வு செய்ய உள்ளனர். இந்த மெகா ஆடிஷன் எபிசோடுகள் தான் வரும் ஜூலை 1 மற்றும் 2-ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வழக்கம்போல அர்ச்சனா இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பிரபல நடிகையான அபிராமி ஆகியோர் இந்த சீசன் முழுவதும் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். மெகா ஆடிஷனில் மட்டும் இவர்களுடன் இணைந்து வைக்கம் விஜயலட்சுமி மற்றும் மனோ ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
இந்த லிட்டில் சேம்ப் சீசன்3 நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
On your Mark, Get set, Go...! 🥳
— Zee Tamil (@ZeeTamil) June 28, 2023
Saregamapa Lil Champs Mega Audition | July 1 | சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு.#SaregamapaLilChamps3 #SaregamapaLilChamps @vaikomvijayalakshmi @singer_mano @vijayprakashvp @abhiramiact @archanachandhoke @singersrinivas pic.twitter.com/J5LbO1tagt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments