சர்தார்' - 'ஜவான்' ஒரே கதையா? 2 படத்தையும் எடிட் செய்யும் எடிட்டரின் பதிலடி பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ’சர்தார்’ மற்றும் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே கதைதான் என திரைப்பட விமர்சகர் ஒருவர் கூறியதற்கு இந்த இரண்டு படங்களையும் எடிட்டிங் செய்யும் எடிட்டர் இதற்கு பதில் அளித்துள்ளார்.
கார்த்தி நடித்த ‘ஜவான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகியது. இந்த ட்ரைலரில் இருந்து இந்த படத்தின் கதை அப்பா ரா ஏஜென்ட் என்றும், மகன் போலீஸ் அதிகாரி என்றும் அப்பா மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மகனின் போராட்டம் தான் கதை என்பதும் புரிய வந்தது.
இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தின் கதையும் இதுதான் என்றும் பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.
இதற்கு இந்த இரண்டு படங்களின் எடிட்டர் ரூபன் பதிலளித்துள்ளார். உங்களுடைய மன தைரியத்தை பாராட்டுகிறேன். ஆனால் எதை வேண்டுமானாலும் இஷ்டத்திற்கு கூறலாமா? என்று அவர் கூறியுள்ளார். மேலும் சிறுவயதில் நான் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்று நினைத்திருந்தேன். ஏனெனில் இருவரின் பெயர்களும் காந்த் என்று முடிவதால். அதைபோல ரா ஏஜண்ட் அப்பா, போலீஸ் மகன் என்றால் ஒரே கதையா? என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ‘சர்தார்’, ‘ஜவான்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியானால் மட்டுமே இரண்டு படங்களும் ஒரே கதையா? அல்லது வெவ்வேறு கதையா? என்பது தெரியவரும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Back in School Days,most of us include me,used to think that
— Editor Ruben (@AntonyLRuben) October 15, 2022
Thalaivar RajiniKANTH & Captain VijayaKANTH are brothers, due to the KANTH factor??
Then i grew up??
Few few are still stuck in the childhood??
And inga RAW agent vechitu,#Ishtathukku RAW va adichu vidakoodaadhu?? https://t.co/tnrwmQ08Ak
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com