விஜய், விக்ரம் பட நாயகியை தேர்வு செய்த 'சர்தார் 2' படக்குழு: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’படத்தின் நாயகி குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நாயகி குறித்த தகவலை அறிவித்துள்ளது.
‘சர்தார் 2’ திரைப்படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் அல்லது பிரியங்கா மோகன் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பையும் புதிய போஸ்டரையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதை மாளவிகா மோகனனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் நடித்த ’மாஸ்டர்’ விக்ரம் நடித்த ’தங்கலான்’ உள்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு ‘சர்தார் 2’ வாய்ப்பு நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும் எஸ்ஜே சூர்யா வில்லன் ஆகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.
Excited to have @MalavikaM_ on board #Sardar2. @Karthi_Offl @iam_SJSuryah @Psmithran @Prince_Pictures @lakku76 @venkatavmedia @thisisysr @george_dop @rajeevan69 @dhilipaction @editorvijay @paalpandicinema @prosathish @UrsVamsiShekar @SonyMusicSouth @sidhuwrites @S2MediaOffl pic.twitter.com/pkT3qFBgty
— Prince Pictures (@Prince_Pictures) August 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com