'சரவணன் மீனாட்சி' சீரியல் நடிகரின் மனைவி கர்ப்பம்.. 5வது மாத நலங்கு விழா புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சரவணன் மீனாட்சி உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகரின் மனைவி கர்ப்பமாகி உள்ளதை அடுத்து ஐந்தாவது மாத நலங்கு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சரவணன் மீனாட்சி’, ’குலதெய்வம்’, ’அரண்மனைக்கிளி’, ’மனசு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகர் அஸ்வின் கார்த்திக். சமீபத்தில் முடிவடைந்த ’வானத்தைப்போல’ என்ற சீரியலில் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மேக்கப் ஆர்டிஸ்ட் காயத்ரி என்பவரை அஸ்வின் கார்த்திக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது காயத்ரி ஐந்து மாத கர்ப்பமாக உள்ள நிலையில், ஐந்தாவது மாத வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் நலங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்த புகைப்படத்தை அஸ்வின் கார்த்திக், காயத்ரி தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் அஸ்வின் கார்த்திக் மற்றும் காயத்ரி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments