நயன்தாராதான் என் முதல் நாயகி. சரவணா ஸ்டோர் உரிமையாளர் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

பிரபல தொழிலதிபரும் சரவணா ஸ்டோர் உரிமையாளருமான சரவணன் சமீபகாலமாக சரவனா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா, தமன்னாவுடன் அவர் மாடலாக நடித்த விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்யப்பட்டபோதிலும் அவர் தொடரந்து மாடலாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விளம்பரங்களை அடுத்து சினிமாவிலும் அவர் நடிக்கவிருப்பதாகவும், தான் அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாராதான் ஹீரோவாக நடிப்பார் என்றும் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சரவணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'விரைவில் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் தனது முதல் பட நாயகி நயன்தாரா என்றும் அவர் தெரிவித்தார். இந்த படத்தை அனேகமாக அவரே தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.