புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடல்… 39 பேருக்கு கொரோனா பாதித்ததாகத் தகவல்!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

சென்னை புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் கடையில் வேலைப் பார்த்த 39 ஊழியர்களுக்கு கொரோனா நோய்ப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அந்த கடை முழுவதும் மூடப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

புரசைவாக்கம் கரியப்பா தெருவிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பல இளைஞர்கள் அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்தக் கடையில் உள்ள 166 ஊழியர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமையும் 159 பேரிடம் மாதிரி சேகரிப்பட்டது. இந்த மாதிரிகளில் 29 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஒட்டுமொத்தமாக 39 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது என்றும் இதில் பலர் இளைஞர்கள் என்பதால் அறிகுறியே இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். சிலர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டம் முழுவதும் மூடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தங்கும் இடத்தில் இருந்துதான் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும் தங்கும் இடமும் கடையும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கடையும் மூடப்பட்டு உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.