சினிமாவில் ஹீரோவாகும் லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன் !
Send us your feedback to audioarticles@vaarta.com
பல கிளைகளை கொண்ட சென்னையின் மிக பிரபலமான லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வழங்கி பல வருடங்களாக புகழ் பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன் , தானே தன்னுடைய நிறுவனத்தின் மாடலாக மாறி விளம்பரங்களில் நடித்து வந்தார்., முதலில் அவருடைய நடிப்பு, டான்ஸ் ஆகியவை கேலி செய்யப்பட்டாலும், அவருடைய விடா முயற்சியால் தற்போது அவர் நடிக்கும் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களுக்கு பழகிவிட்டது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன் இணைந்து அவர் நடிப்பதால் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்தது
சில வருடங்களுக்கு முன் லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன், சினிமாவில் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. ஆம், லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன் விரைவில் ஒரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த முழுவிபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments