ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? சரத்குமார் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் சரத்குமார் மீது சமூக வலைத்தள பயனாளிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு சரத்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை , மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.

அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைதான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன்.
பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிக்கை சகோதரர்கள் " ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்"

அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர் ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.

எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தழிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

More News

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எந்தவித திரையுலக பின்னணியும் இன்றி தானாகவே சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் பிசியான நாயகர்களில் ஒருவராக இருந்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்...

நான் பிறப்பால் தமிழச்சி என்பதில் பெருமை அடைகிறேன். த்ரிஷாவின் உணர்ச்சிமிகு கடிதம்

கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷாவுக்கு எதிராக சமூக வலைத்தள பயனாளிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வந்தனர். த்ரிஷாவின் சமூக வலைத்தள பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு அதில் த்ரிஷா கூறாத கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன...

இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி பொங்கல் திருவிழா படமாக சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்தபோதிலும் ஓப்பனிங் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. குறிப்பாக சென்னை வசூல் 'தெறி' படத்தை அடுத்து மிக அதிகமாக வசூல் செய்த விஜய் படங்களில் இரண்டாவது பெரிய ஓப்பனிங் வசூல் என்ற பெருமையை பெற்றது.

படப்பிடிப்பில் எல்லை மீறுவது வருந்ததக்கது. நடிகர் சங்கம் அறிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோலிவுட் திரையுலகில் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

த்ரிஷாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு

இந்நிலையில் த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய டுவீட்டுக்களை சிலர் பதிவு செய்து வருவதாகவும், அந்த டுவீட்டுக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பதமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்...