எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடனான ஒப்பந்தம் குறித்து சரத்குமார் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,October 19 2015]

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாண்டவர் அணியினர் செய்யும் முதல் வேலை SPI நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சரத்குமார் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமார் இந்த சந்திப்பில் மேலும் கூறியதாவது: "நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் பணியாற்றி இருக்கிறேன். அந்த காலத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளேன். தற்போதும் நடிகர் சங்க பணிகளுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், சமீபத்தில் என் மீது கூறப்பட்ட முறைகேடு புகார்கள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் ஏற்கனவே பதிலளித்திருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள், முறைகேடு புகார்கள் உண்மையில்லை.

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை நாங்கள் விற்க நினைக்கவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் ஒப்பந்தம் போட்டதுதான் தற்போது தேர்தல் நடக்க காரணம். ஆனால், அந்த ஒப்பந்தம் சிறந்தது என்று இப்போதும் நான் நினைக்கிறேன்.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியாக வந்த விமர்சனங்களால், கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதியே எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை நடிகர் சங்க தலைவரிடம் வழங்குவேன்''

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

மேலும் என் வாழ்க்கையில் நான் பல வெற்றி தோல்விகளை பார்த்துவிட்டேன். ஆகையால் இந்த தோல்வி என்னை பாதிக்காது. சங்க உறுப்பினராக தொடர்ந்து செயல்படுவேன். எனக்கு கெளரவ பதவி எதுவும் வழங்கினால் அதை கண்டிப்பாக நான் ஏற்க மாட்டேன். ஒரு சங்க உறுப்பினராக என்னை எப்போது அழைத்து பேசினாலும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். உங்களுடன் தொடர்ந்து நான் பயணிக்க தயாராக உள்ளேன். தேவைப்பட்டால் என்னை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். என்று சரத்குமார் கூறியுள்ளார்.

More News

நடிகர் சங்க தேர்தல்: செயற்குழு உறுப்பினர்களின் வெற்றி விபரம்

நடிகர் சங்க தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் துணைத்தலைவர்களின் முடிவுகள் நேற்று இரவே வெளிவந்துவிட்ட நிலையில்...

பதவியேற்க இருக்கும் பாண்டவர் அணி முன் நிற்கும் கடமைகள்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி கிட்டத்தட்ட முழு வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு நடிகர்கள்...

தனுசின் 'தங்கமகன்' வியாபாரம் தொடங்கியது

தனுஷ் நடித்த 'தங்க மகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்...

'விஜய் 61' படத்தின் இயக்குனர்?

சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'ஜெயம் சகோதரர்களின் தனி ஒருவன்'...

கமல்ஹாசனின் பாணியை பின்பற்றும் அருள்நிதி

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாபநாசம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி...