நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் அதிரடி நீக்கம். அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,March 14 2016]

நடிகர் சங்கத்தில் பெருமளவு முறைகேடு நடந்ததாக முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, மற்றும் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது சமிபத்தில் புதிய நிர்வாகிகள் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டது என்பது ஏற்கனவே தெரிந்ததே.


இந்நிலையில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் இன்று அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளனர் என்றும், முறைகேடு செய்த சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிக நீக்கம் செய்துள்ளதாகவும் சற்று முன் நடந்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு தேவையான நிதியை திரட்டுவதில் இருந்து கட்டிடம் கட்டும் பணிகளை ஆரம்பிப்பது வரையிலான பலவிஷயங்கள் இந்த செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.