நடிகர் சரத்குமாருக்கு கொரோனா: உறுதி செய்த ராதிகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு திரையுலகினர்களும் தப்பவில்லை என்பது தெரிந்ததே
எஸ்பிபி உள்பட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தற்போது மருத்துவர்களின் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சரத்குமார் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என தான் நம்புவதாகவும் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ராதிகாவின் இந்த டுவிட்டை அடுத்து சரத்குமார் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என அவரது ரசிகர்களும் திரையுலகினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
Today Sarath tested positive for Coronavirus in Hyderabad. He’s asymptomatic and in the hands of extremely good doctors! I will keep you updated about his health in the days to come. @realsarathkumar @rayane_mithun @imAmithun_264 @varusarath5
— Radikaa Sarathkumar (@realradikaa) December 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com