சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு கைது வாரண்ட்

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்தி ஒன்று பிரபல பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததால், நடிகர் சங்கம் ஒரு கண்டனம் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கூட்டதில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சேரன், விவேக், சத்யராஜ், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை காரசாரமாக விமர்சித்தனர்.
நடிகர்களின் இந்த விமர்சனத்திற்கு எதிராக ரசாரியா என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நடிகர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீலகிரி நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை பலகட்டங்களாக நடைபெற்றபோது குற்றம் சாட்டப்பட்ட நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் சூர்யா, சரத்குமார் உள்பட யாரும் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நேரில் ஆஜரகாத நடிகர்கள் சூர்யா சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் தொடர்ந்து ஆஜராகாத நடிகர்களுக்கு அவர் தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த பிடிவாரண்ட் உத்தரவால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நடிகை ஸ்ரீதேவியின் 50 வருடங்களும், 300வது படமும்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது.

உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு புது வழி காட்டும் சங்கமித்ரா

பிரபல இயக்குனர் ராம்நாராயணன் அவர்கள் 100 படங்கள் இயக்கிய ஒரு வெற்றி இயக்குனர். தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பட படங்கள் தயாரித்து கோலிவுட் திரையுலகில் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். அவரது கொள்கை குறைந்த பட்ஜெட்டில் பெரிய ஸ்டார் இல்லாமல் மினிமம் கியாரண்டி படம் கொடுக்க வேண்டும் என்பதே. அவர

ஹாலிவுட் பட தொடக்கவிழாவில் பிரபல எழுத்தாளருடன் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த 'சங்கமித்ரா' படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே...

வெற்றிக் கதவை திறந்துவிட்டோம்: 'சங்கிலி புங்கிலி' பட நிறுவனம் பெருமிதம்

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் அதனையடுத்த வார நாட்களின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது...

சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றியும் கடைசி சலுகையும்...

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி நடைமுறையை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.