மெர்சல் ஜிஎஸ்டி வசனம் குறித்து சரத்குமார் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர்கள் தற்போது ஏன் இந்த படத்தை எதிர்த்தோம் என்று கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களே எதிர்பாராத வகையில் பாஜக ஆதரவு திரையுலகினர் கூட மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பாஜக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டதட்ட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மெர்சல் பட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் அழுத்தம் தரப்படுவதாகவும், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் இடம் பெற்றிருப்பதில் தவறில்லை என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

தமிழ்த்திரையுலகின் பெரும்பாலானோர் மெர்சல் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்னும் விஷால் உள்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மெளனமாக இருப்பது ஏன் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.