ஊரை விட்டு ஓடுறேன்னு சொன்னவர் அரசியல் பேசுவது ஏன்? கமலுக்கு சரத்குமார் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை கூறி வரும் நிலையில் ஜெயலலிதா இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது மட்டும் அரசியல் பேசுவது ஏன்? என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி கேட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 11வது ஆண்டுவிழா சேலத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சரத்குமார் கூறியதாவது: இன்றைக்கு வீரமாக அரசியல் பேசும் கமல் 1996ஆம் ஆண்டு எங்கே சென்றிருந்தார். அன்று நடந்த ஊழல் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது பயமா? ஒரு படத்தில் நஷ்டமாகிவிட்டது என்பதற்காக ஊரைவிட்டி ஓடிப்போறேன்னு சொன்ன நீங்கள் ஏன் இன்றைக்கு அரசியல் பேசுறீங்கள். ஒரு கருத்தை எப்போது, எப்படி சொல்ல வேண்டும் என்பது கூட கமல்ஹாசனுக்கு தெரியாது. அவர் சொல்லும் கருத்துக்கள் பல புரியாமல் உள்ளது. நான் கூட அவருடைய கருத்துக்கு தெளிவுரை எழுதலாம் என்று நினைத்தேன்.
முதலமைச்சராக வருவதற்கு எல்லோருக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் அந்த பதவியை அடைய தகுதியும் கடுமையான உழைப்பும் தேவை. இந்த சரத்குமாருக்கு அந்த தகுதி இருக்கின்றது. சரத்குமாரை போல் கடுமையாக உழைத்தவர்கள் மட்டும் என்னை விமர்சனம் செய்ய தகுதி உடையவர்கள்
பத்திரிகை என்பது நான்காவது தூண். மக்களை திசை திருப்பாமல் ,டி.ஆர்.பி குறித்து கவலைப்படாமல் மக்களுக்கான உண்மையான தலைவர் குறித்து எழுதுங்கள். அந்த தலைவர் ஏன் சரத்குமாராக இருக்கக்கூடாது என்று எழுதுங்கள்' என்று சரத்குமார் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments