முதல்வர் தாயார் மறைவு: பிரபல நடிகர் இரங்கல் அறிக்கை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தாயை இழந்து வாடும் முதல்வருக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்பட பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இதுகுறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் உடல் நலக் குறைவினால் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது

அன்பான தாயை பிரிந்து வாடும் முதலமைச்சரின் வேதனையை உணர முடிகிறது. தாயின் மறைவு முதல்வருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

அம்மையார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன். இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

More News

எவிக்சனில் திடீர் திருப்பம்: மக்களின் வாக்குகளை மாற்றி அமைக்கும் சக்தி

இந்த வார நாமினேஷன் படலம் நேற்று தொடங்கிய நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எட்டு பேர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டன் என்பதால் அவரது பெயர் நாமினேஷன் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

ரூபாய் நோட்டில் கொரோனா வைரஸா??? பதைக்க வைக்கும் தகவல்!!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் பொருட்களின் மீது 3 நாட்கள் வரையிலும் தங்கியிருக்கும் என்ற அறிவிப்பை அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டு இருந்தது.

தமிழக முதல்வரின் தாயார் காலமானார்: துணை முதல்வர் ஆறுதல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93 

விஜய்சேதுபதி இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடித்த 'கருப்பன்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பன்னீர்செல்வம் ஏற்கனவே 'ரேணிகுண்டா' என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே 

நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க? 'மாநாடு' தயாரிப்பாளர் ஆவேசம்!

சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,