close
Choose your channels

சரத்குமார் குடும்பத்தில் இன்னொரு வெறித்தனமான விஜய் ரசிகரா? வைரலாகும் வீடியோ

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்க்கு பொதுமக்கள் தரப்பில் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திரையுலகிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல முன்னணி நடிகர், நடிகைகள் அவருடைய ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி ஏற்கனவே தான் விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறி இருப்பது தெரிந்ததே. இதனையடுத்து தற்போது சரத்குமார் குடும்பத்தில் மேலும் ஒரு விஜய் ரசிகர் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சரத்குமாரின் மகன் ராகுல், விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ’வெறித்தனம்’ என்ற பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடியுள்ளார். விஜய்யின் ஸ்டெப் போலவே அவரும் ஸ்டெப் போட்டு நடனமாடி உள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விஜய்யை தனது சகோதரர் என்று அன்புடன் சரத்குமார் அழைத்து வருகிறார் என்பதும், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, தான் ஒரு விஜய்யின் ரசிகர் என்று கூறி வருவதை அடுத்து தற்போது சரத்குமார் மகன் ராகுலும், விஜய்யின் ’வெறித்தனம்’ பாடலுக்கு நடனமாடி தானும் ஒரு விஜய் ரசிகர் என்பதை நிரூபித்து உள்ளதாக தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment