சிங்கம் குகையில் இல்லாத போது அரசியல் செய்கிறார் கமல்: சரத்குமார்
- IndiaGlitz, [Sunday,November 12 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் இனிமேலும் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியை எழுப்ப அவசியமில்லாத வகையில் விறுவிறுப்பாக அரசியல் பணியை படிப்படியாக செய்து வருகிறார். வடக்கே அரவிந்த் கெஜ்ரிவால், கிழக்கே மம்தா பானர்ஜி, மேற்கே பினராயி விஜயன் ஆகிய முதல்வர்களை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்
இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகளுக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் ஆதரவு கொடுத்து வருகிறது. அவர் கட்சி ஆரம்பித்தவுடன் அவருடைய கட்சியில் பெரும்பாலான முன்னணி நடிகர், நடிகைகள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'சிங்கம் குகையில் இல்லாத போது அரசியல் செய்யும் கமல், விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது ஓடி ஒளிந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 'கருத்துக்களை கூறிவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஓடி ஒளிந்து கொள்பவன் நான் இல்லை' என்றும் அவர் கூறியுள்ளார். கமல்ஹாசனுக்கு எதிரான சரத்குமாரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது