வாரிசு' படப்பிடிப்பு தள புகைப்படத்தை வெளியிட்ட சரத்குமார்: 68 வயதில் இவ்வளவு ஸ்மார்ட்டா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ’வாரிசு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சரத்குமார் ஹைதராபாத்தில் ’வாரிசு’ படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 68 வயதில் சரத்குமார் இவ்வளவு ஸ்மார்ட்டாக இருப்பதன் ரகசியம் என்ன என்று பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
’வாரிசு’ படத்தில் சரத்குமார் விஜய்யின் அண்ணனாக நடித்து வருவதாகவும் அவருடைய கேரக்டர் படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com