சூர்ய வம்சத்தில் கலெக்டர் ஆக்கினேன், நிஜத்தில் எம்பி ஆக்குவேன்: சரத்குமார் பேட்டி..!
- IndiaGlitz, [Sunday,March 24 2024]
’சூர்யவம்சம்’ திரைப்படத்தில் என் மனைவி கேரக்டரில் நடித்தவரை கலெக்டர் ஆக்கியது போல் நிஜத்தில் என் மனைவியை பாராளுமன்ற எம்பி ஆக்குவேன் என்று நடிகர் அரசியல்வாதியுமான சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்து கொண்டார். இதையடுத்து அவருக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அந்த ஒரு தொகுதியில் ராதிகா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மனைவி ராதிகாவுடன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் ’விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட்டாலும் என் மனைவி போட்டியிட்டாலும் ஒன்றுதான் என்றும், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல் எனது வெற்றிக்கு பின் ராதிகா இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது போல் பெண்களுக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக ராதிகா செய்தியாளர்களிடம் பேசிய போது ’பிரதமர் மோடி திறமையான ஆட்சியை செய்து வருகிறார் என்றும், அவரது பல திட்டங்கள் தமிழகத்திற்கு வந்து சேராத நிலையில் நான் எம்பி ஆனால் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். மேலும் மக்களின் அடிப்படை தேவையான உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை நான் எம்பி ஆனவுடன் உறுதி செய்வேன்’ என்றும் அவர் கூறினார்.