நான் சொன்ன அதையே மக்கள் கேட்கல, இதை மட்டும் கேட்டுருவாங்களா? சரத்குமார் ஆதங்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னதையே மக்கள் கேட்கவில்லை என்றும் நான் ரம்மி விளையாட சொன்னால் மட்டும் விளையாடி விடுவார்களா என்றும் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சரத்குமார் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது ரம்மி விளையாட்டுக்கு அவர் விளம்பரம் செய்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘ரம்மி என்பது அறிவு பூர்வமான விளையாட்டு என்றும் அதை விளையாட திறமை அவசியம் என்றும் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் ஆன்லைன் ரம்மி காக தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் ரம்மி விளையாட்டுக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும் எனக்கு ஓட்டு போடுங்கள் என நான் மக்களிடம் கேட்டபோது எனக்கு யாரும் ஓட்டு போடவில்லை என்றும் நான் ரம்மி விளையாட சொன்னால் மட்டும் விளையாடுவார்களா? என்றும் அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் ரம்மி விளையாட்டு குறித்த தடை சட்டம் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்திற்கு விரைவில் கவர்னர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Watch | "எனக்கு ஓட்டு போட சொல்றேன்.. போட மாட்டிக்கிறாங்க.. நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடிடுவாங்களா?"
— Sun News (@sunnewstamil) December 13, 2022
செய்தியாளர் சந்திப்பில் ஆதங்கப்பட்ட சரத்குமார்#SunNews | #Sarathkumar | #OnlineRummy | @realsarathkumar pic.twitter.com/iJBr7DAeEq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com