800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது.. சரத்குமாரின் பரபரப்பு பேச்சு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சரத்குமார் பேசியபோது 800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்த போது இந்த திருமணத்திற்காக சரத்குமார் 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இதற்கு நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த போது சரத்குமார் பதில் அளித்தார். ’என்னுடைய மகள் வரலட்சுமி திருமணத்திற்கு நான் 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக வதந்தியை பரப்பி வருகின்றனர். அவ்வளவு பணம் என்னிடம் எங்கே இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. அப்படி பரவும் செய்திகள் முற்றிலும் தவறானது. ஒரு தவறான தகவலை எனக்கே தெரியாமல் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வயதிலும் நான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு எனது நல்ல பழக்கவழக்கங்கள் தான் காரணம். வீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான், இப்போது கூட என்னால் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்ள முடியும், ஆனால் இன்றைய இளைஞர்கள் குடி, கஞ்சா என்று போதைக்கு அடிமையாகி வருவது தான் மிகவும் கவலையாக இருக்கிறது’ என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சரத்குமார் பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments