800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது.. சரத்குமாரின் பரபரப்பு பேச்சு..!

  • IndiaGlitz, [Monday,July 08 2024]

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சரத்குமார் பேசியபோது 800 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்த போது இந்த திருமணத்திற்காக சரத்குமார் 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

இதற்கு நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த போது சரத்குமார் பதில் அளித்தார். ’என்னுடைய மகள் வரலட்சுமி திருமணத்திற்கு நான் 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக வதந்தியை பரப்பி வருகின்றனர். அவ்வளவு பணம் என்னிடம் எங்கே இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. அப்படி பரவும் செய்திகள் முற்றிலும் தவறானது. ஒரு தவறான தகவலை எனக்கே தெரியாமல் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த வயதிலும் நான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு எனது நல்ல பழக்கவழக்கங்கள் தான் காரணம். வீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான், இப்போது கூட என்னால் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்ள முடியும், ஆனால் இன்றைய இளைஞர்கள் குடி, கஞ்சா என்று போதைக்கு அடிமையாகி வருவது தான் மிகவும் கவலையாக இருக்கிறது’ என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சரத்குமார் பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

ஒன்றல்ல.. இரண்டு போஸ்டர்.. 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. எப்போது?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியான நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்

விஜய் அழைத்தால் அவரது கட்சியில் சேருவேன்.. திமுக, அதிமுக, பாஜகவில் இருந்த நடிகர் பேச்சு..!

திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளில் இருந்த நடிகர் தான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை என்றும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்பதாகவும் அவர் அழைத்தால்

சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்.. ஆனாலும் நீங்க செய்தது தப்புதான்..!

https://cinema.vikatan.com/kollywood/theliverdoc-apologises-to-samantha-ruth-prabhu-for-endangering-public-health

திருவள்ளுவர் மனைவி வாசுகி கேரக்டர்.. கடுமையாக விரதம் இருக்கும் நடிகை.!

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் திருவள்ளுவர் மனைவியாக நடிக்கும் நடிகை

தமிழ் நடிகை தான் ஹீரோயின்.. ஷாருக்கான் செய்த பரிந்துரை.. விட்டதை பிடித்துவிட்டாரா?

ஷாருக்கான் தனது முந்தைய படத்தின் நாயகியாக தமிழ் நடிகையை பரிந்துரை செய்த நிலையில் அப்போது அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிக்க இருக்கும்