ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர்? சரத்குமார் காரசாரமான பதில்!

ராஜராஜ சோழனின் புகழை குறிப்பிடும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜராஜ சோழனை இந்து மன்னனாக்க முயற்சி செய்கிறார்கள் என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் தோன்றி வருகின்றன என்பது தெரிந்ததே. உலக நாயகன் கமல்ஹாசன் இதுகுறித்து கூறிய போது, ‘ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்றும் அப்போது சைவ வைணவ மதங்கள் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு பதிலளித்த ’பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்த சரத்குமார் காரசாரமான பதில் கூறியுள்ளார். ‘ராஜராஜசோழன் காலத்தில் சைவ சமயம், வைணவ சமயம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த சமயங்கள் இந்து சமயத்தில் இணைத்ததும் உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்யவேண்டும்.

மாமன்னன் ராஜராஜசோழன் இந்துவா? சைவமா? வைணவமா? என்ற சர்ச்சை நாட்டிற்கு தேவையா? அவரின் புகழை உலகிற்கு எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். சரத்குமாரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.