விஜய் சிகரெட் பிடிப்பதெல்லாம் ஒரு பிரச்சனையா? சரத்குமார் விளாசல்

  • IndiaGlitz, [Sunday,July 01 2018]

தளபதி விஜய் நடித்த படம் சமீபகாலமாக பிரச்சனை இன்றி வெளியானதாக சரித்திரம் இல்லை. ஒருவிதத்தில் அந்த பிரச்சனைகள் அவருடைய படத்தின் புரமோஷன்களாகவும் பயன்பட்டன என்பதும் ஒரு வேறு விஷயம். இதற்கு பெரிய உதாரணமாக 'மெர்சல்' படத்தை கூறலாம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. அதில் விஜய் சிகரெட் பிடித்தவாறு இருந்ததற்கு ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருசில தனியார் தொலைக்காட்சிகள் இதுகுறித்து மூன்று மணி நேரம் விவாதமும் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எதிர்ப்புகளும் விவாதங்களும் படத்தின் விளம்பரங்களாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் சரத்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு நடிகர் திரைப்படத்தில் சிகரெட் பிடிப்பதும் மது அருந்துவதும் நிழல். அது ஒரு சினிமா. நிஜத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து அறிக்கை விடுவதும், விவாதம் செய்வதும் தேவையற்றது' என்று கூறியுள்ளார்.