தமிழக முதல்வருடன் சரத்குமார் - ராதிகா சந்திப்பு

  • IndiaGlitz, [Sunday,July 10 2016]

முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா இன்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மகள் ரேயானின் திருமண அழைப்பிதழை முதல்வரிடம் நேரில் அளித்தனர்
இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்ற ரேயான் தற்போது ராடான் டிவியின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். ரேயானை திருமணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளை அபிமன்யூ மிதுன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் அவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அபிமன்யூ-ரேயானுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் முதல்வரை சந்தித்து சரத்குமார்-ராதிகா அழைப்பிதழை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.