அதிமுகவுக்கு ஆதரவு அளித்த பிரபல நடிகரின் கட்சி

பிரபல நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

ஆனால் விருப்ப மனு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட எந்த பணியிலும் அக்கட்சி ஈடுபடாததால் மக்களவை தேர்தலில் அக்கட்சி போட்டியிடாது என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சரத்குமார், அதிமுகவுக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிப்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்த சரத்குமார், தனது கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.