நன்றி மறந்த கமல் முன்மொழியும் தலைவர் நமக்கு தேவையா? சரத்குமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் தேதி நெருங்கி வருவதால் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நன்றி மறந்தவர் என்றும், அப்படிப்பட்ட ஒருவர் வழிகாட்டும் ஒரு சங்கத்தலைவர் எப்படி நல்லவிதமாக செயல்பட முடியும்? என்றும் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தின் பிரச்சனையின்போது நாட்டை விட்டு வெளியேற போகிறேன் என்று அவர் சொன்னபோது அவருக்காக இரவு நேரத்தில் சென்று அந்த படத்தின் பிரச்சனையை தீர்க்க உதவினேன். நான் மட்டுமின்றி எனது மனைவி ராதிகா, மற்றும் ராதாரவியும் அவருக்கு பக்கபலமாக இருந்தோம். அதேபோல் 'உத்தமவில்லன்' பட பிரச்சனையின்போதும் தொடர்ந்து 36 மணி நேரம் தூங்காமல் விழித்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த படம் ரிலீஸ் ஆக உதவினேன்.
'உத்தம வில்லன்' படத்தில் நான் நடிக்கவில்லை, லிங்குசாமியின் படத்திலும் நான் நடிக்கவில்லை. இருப்பினும் ஒரு அற்புதமான கலைஞனின் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக உழைத்த எனக்கு நன்றி கூட சொல்லாமல் நன்றி மறந்தவர் கமல். இவ்வாறு நன்றியில்லாதவர்கள் முன்மொழிகின்ற ஒரு தலைவர் நடிகர் சங்கத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்கின்றேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments