சூப்பர்ஸ்டாரின் அப்பா வேடத்தில் ரீ-எண்ட்ரி ஆகும் சரத்குமார்

  • IndiaGlitz, [Monday,July 18 2016]

கடந்த ஆண்டு சரத்குமார் இரு வேடங்களில் நடித்த 'சண்டமாருதம்' ஓரளவுக்கு சுமாரான வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இடையில் நடிகர் சங்க தேர்தல், தமிழக சட்டமன்றதேர்தல், தற்போது மகள் ரேயானின் திருமண ஏற்பாடு என பிசியாக இருந்ததால் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'ராஜகுமாரா' படத்தில் அவருடைய தந்தையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தந்தை கேரக்டர் என்றாலும் அவருக்கு ஆக்சன் மற்றும் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அவருடைய கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மகளின் திருமணத்திற்கு பின்னர் அவர் தமிழ் படங்களிலும் நடிக்க இருப்பதாகவும், அதற்கான கதையை அவர் ஒருசில இயக்குனர்களிடம் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

ஆயுதபூஜை ரேஸில் இணைந்த விஜய்சேதுபதி படம்

2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஆயுதபூஜை விடுமுறை நாளில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'ரெமோ'...

சமுத்திரக்கனியின் 'அப்பா' ரீமேக்கில் சூப்பர் ஸ்டார்?

கடந்த 1ஆம் தேதி வெளியான சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் 'கத்தி'யை தயாரிக்கின்றது லைகா நிறுவனம்

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் முதன்முதலாக இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்தது.

'கபாலி' வழக்கில் திரையுலகினர்களுக்கு நீதிபதி கூறிய அறிவுரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு...

'கவலை வேண்டாம்' படக்குழுவினர்களின் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'போக்கிரி ராஜா' எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் தற்போது நம்பியிருப்பது 'கவலை வேண்டாம்'