'சென்னையில் ஒரு நாள்' உண்மை சம்பவத்தின் நாயகனை சந்தித்தேன்: சரத்குமாரின் நெகிழ்ச்சி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2013 ஆம் ஆண்டு ’சென்னையில் ஒரு நாள்’ என்ற திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான நிலையில் அந்த உண்மை சம்பவத்தின் உண்மை நாயகனை தான் நேரில் சந்தித்ததாக அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார்
பிரபல மலையாள இயக்குனர் சாகித் காதர் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, பிரசன்னா, சேரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் ’சென்னையில் ஒரு நாள்’. மூளை சாவு அடைந்த ஒரு இளைஞனின் இதயத்தை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் சவாலான கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் நடந்தது என்பது குறிப்பிடப்பட்டது.
ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன இந்த படம் பின்னர் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் தமிழிலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த உண்மை சம்பவத்தில் உண்மை நாயகனான காவல்துறை அதிகாரி மோகன் என்பவரை சமீபத்தில் தான் நேரில் சந்தித்ததாகவும் கூறியுள்ள சரத்குமார் அது குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவும் செய்து உள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
29.03.2013 - சென்னையில் ஒரு நாள் திரைப்படம் வெளிவரக் காரணமான ஓர் உண்மை சம்பவத்தின் நாயகன் திரு.மோகன் அவர்களை, நேற்றைய தினம் எனது THOR - ஐ அழைத்துக் கொண்டு நடைபயிற்சி சென்ற போது நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
20.09.2008 - திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 15 வயது ஹிதேந்திரன் விபத்துக்குள்ளாகி, துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்ததில் அவரின் இதயத்தை, அப்போதைய கூடுதல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உதவியுடன் தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு 75 நிமிடத்தில் கடக்கக்கூடிய தொலைவை 11 நிமிடங்களில் கடந்து இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியவர் திரு.மோகன் அவர்கள்.
உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டி, ஹிதேந்திரன், சிறுமி அபிராமி இப்பூவுலகை விட்டு நீங்கினாலும், என்றும் நினைவில் நிற்பவர்கள். மனிதநேயம், மனதில் துணிவு கொண்டு அச்சமயம் உயிரைக்காத்த அனைவரும் உண்மை நாயகர்கள். அந்த வகையில், தற்போது நீலாங்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு.மோகன் அவர்களை சந்தித்து உரையாடியதில் நெகிழ்கிறேன்.
இவ்வாறு நடிகர் சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
29.03.2013 - சென்னையில் ஒரு நாள் திரைப்படம் வெளிவரக் காரணமான ஓர் உண்மை சம்பவத்தின் நாயகன் திரு.மோகன் அவர்களை, நேற்றைய தினம் எனது THOR - ஐ அழைத்துக் கொண்டு நடைபயிற்சி சென்ற போது நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) May 12, 2023
(1) pic.twitter.com/h9Gzq7bGes
மனிதநேயம், மனதில் துணிவு கொண்டு அச்சமயம் உயிரைக்காத்த அனைவரும் உண்மை நாயகர்கள். அந்த வகையில், தற்போது நீலாங்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு.மோகன் அவர்களை சந்தித்து உரையாடியதில் நெகிழ்கிறேன் (4)#chennaiyilOruNaal #hearttransplant #emergencyservices
— R Sarath Kumar (@realsarathkumar) May 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments