விஜயகாந்த்தை சந்தித்து பேசியது என்ன? சரத்குமார் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசியல் விஜயகாந்தின் தேமுதிகவை கடந்த சில நாட்களாக சுற்றி வருகிறது. அதிமுக, திமுக என இந்த இரண்டு கூட்டணியில் தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்று அக்கட்சியின் தொண்டர்களுக்கே இன்னும் புரியவில்லை
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்களை ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பல பிரபலங்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு அரசியல் குறித்தும் பேசி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று விஜயகாந்தை நடிகரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சரத்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும், அவர் புத்துணர்ச்சியுடன் பேசிய கண்டு மகிழ்ந்ததாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பூரண குணமடைந்து நண்பர் விஜயகாந்த் மீண்டும் பழைய வலிமையுடன் வலம் வர வாழ்த்து தெரிவித்ததாகவும், அதுமட்டுமின்றி இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் தனது கருத்துக்களை பதிவு செய்து வந்ததாகவும் சரத்குமார் தெரிவிவித்துள்ளார்.
தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்று இன்னும் முடிவாகாத நிலையில் சரத்குமாரின் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#ASKSarathkumar @ThanthiTV @news7tamil @TamilTheHindu pic.twitter.com/3qULkjxjxf
— R Sarath Kumar (@realsarathkumar) March 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments