ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது இந்த படத்தில் பிரபல தமிழ் திரைப்பட ஹீரோ சரத்குமார் இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா’ திரைப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் தற்போது மீண்டும் அவர் ராகவா லாரன்ஸ் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
Happy to welcome the one and only @realsarathkumar sir onboard for #Rudhran #ருத்ரன் @offl_Lawrence @5starkathir @priya_Bshankar @RDRajasekar @gvprakash @5starcreationss @venkatjashu @prosathish pic.twitter.com/796RRNHEkv
— Fivestar Creations LLP (@5starcreationss) February 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments