ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் பிரபல தமிழ் திரைப்பட ஹீரோ சரத்குமார் இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா’ திரைப்படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் தற்போது மீண்டும் அவர் ராகவா லாரன்ஸ் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

More News

அடுத்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்த சிம்பு: எப்போது ரிலீஸ்?

நடிகர் சிம்பு நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக குறைவாகவே ரிலீஸ் ஆனாலும் தற்போது அவர் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் என்பதும்

பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பது தவறா? சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்!

பூட்டிய வீட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்: பிரபல தமிழ் ஹீரோ

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன 

வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய ரஜினி பட நாயகி!

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுத்ததால் பெரும் பரபரப்பு . 

மாப்பிள்ளை யார்? திருமணம் குறித்து மனம் திறந்த விஜே ஜாக்லின்!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ஜாக்லின் தற்போது 'தேன்மொழி' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்