இளம் ஹீரோவுடன் இணைந்த சரத்குமார்.. டைட்டில் போஸ்டர் வீடியோ ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் சரத்குமார் ஏற்கனவே ஒரு சில இளம் ஹீரோக்கள் மற்றும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் விஜய்யின் ‘வாரிசு’ , ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் ஹீரோ உடன் நடித்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இளம் ஹீரோக்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் ’சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பிறகு ’தெகிடி’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’ஹாஸ்டல்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’போர் தொழில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் ஜோடியாக நிகிலா விமல் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடித்து வருகிறார்.
அப்பலாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
Mark your calendars🎬
— Ramesh Bala (@rameshlaus) April 18, 2023
The esteemed content house Applause Entertainment is all set to release their first ever #Tamil film #PorThohzil 🔥
With a star studded cast of @AshokSelvan, @realsarathkumar and @Nikhilavimal1 this investigation is going to be one we can not miss!👀… pic.twitter.com/j1rdZ9h4ja
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com