சரத்குமார் சஸ்பெண்ட் வழக்கில் நீதிமன்றம் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Monday,November 28 2016]

முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் இந்த சஸ்பெண்ட்டை எதிர்த்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு கடந்த சிலநாட்களாக விசாரணையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் சரத்குமாரும், ராதாரவியும் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். சஸ்பெண்ட் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன்னை நிரந்தரமாக நீக்கியது சட்டவிரோதம் என்று சரத்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சரத்குமார், ராதாரவியின் சஸ்பெண்ட் வழக்கை நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. வழக்கு தொடர்ந்த இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டதால் புதிய வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

More News

நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். முழுவிபரம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் ஒருசில சிறு சலசலப்புடன் நேற்று முடிவடைந்தது. கருணாஸ் கார் உடைப்பு, விஷால்...

விஜய், விஷாலுடன் முதன்முதலில் மோதும் சந்தானம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' மற்றும் விஷால் நடித்த 'கத்திச்சண்டை' ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும்...

சட்டத்தின் வாயிலாக தீர்வு காண்போம். நிரந்தர நீக்கம் குறித்து சரத்குமார்

நேற்று சென்னையில் நடைபெற்ற 63வது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் முன்னாள் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம். நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்த சில துளிகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடப்பதாக இருந்து அதன் பின்னர் மிரட்டல் காரணமாக தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்திலேயே நடந்தது. இந்த பொதுக்குழுவில் திரைப்பட நடிகர்கள்,

அமெரிக்கர்களை பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு அனுப்ப பெண்டகன் திட்டம்

உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருதி பூமியில் இருந்து வேற்று கிரகத்திற்கு இடம்பெற செய்யும் திட்டம் இருப்பதாக பென்டகன் அமெரிக்க பாதுகாப்பு தலைமையக அதிகாரி வின்ஸ்டன் பியவுசெப் கூறியுள்ளார்.