சரத்குமார்-விஷாலை ஒன்று சேர்த்த 'பாயும் புலி' பிரச்சனை?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்த பாயும் புலி' உள்பட எந்த தமிழ் திரைப்படமும் வரும் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என நேற்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. ஆனால் தற்போது முடிவு மாற்றப்பட்டு 'பாயும் புலி' உள்பட நாளை ரிலீஸாகவேண்டிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு கொண்டிருக்கும் சரத்குமார்-விஷாலை இந்த பிரச்சனை ஒன்று சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. விஷால் நடித்த 'பாயும் புலி' படத்தை நிறுத்தக்கூடாது என்றும் திட்டமிட்டபடி படம் வெளியாகவேண்டும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் சங்கம் சார்பில் விஷாலுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதேபோல் 'சவாலே சமாளி' படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டியனும் திட்டமிட்டபடி தனது படம் கண்டிப்பாக வெளிவரும் என்றும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது சரியான முடிவு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com