ரஜினிகாந்தை சந்தித்த சரத்குமார் குடும்பம்.. வைரலாகும் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவருடைய வீட்டிற்கு சென்று சரத்குமாரின் குடும்பம் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியின் திருமண பத்திரிகையை கொடுப்பதற்காக ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று சென்றதாகவும் அப்போது அவர் தனது குடும்பத்துடன் ரஜினி மற்றும் அவருடைய மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
நடிகை வரலட்சுமி மற்றும் நிக்கோலா சச்தேவ் நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் இவர்களது திருமணம் தாய்லாந்தில் ஜூலை 2ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு முந்தைய நாள் மெஹந்தி நிகழ்ச்சி மற்றும் திருமணத்திற்கு மறுநாள் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமண தேதி நெருங்கி வருவதை அடுத்து பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை சரத்குமார் குடும்பம் கொடுத்து வரும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இந்த திருமணத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Got to meet our thalaivar @rajinikanth sir and invite him and latha aunty...thank you sir for always being so warm and loving..thank you @ash_rajinikanth for veinf so sweet as always..the apple didn't fall far from the tree..❤️❤️@realsarathkumar @realradikaa #chayadevi… pic.twitter.com/X2alVW8VoD
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) June 6, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments