நடிப்பதற்கு டிப்ஸ் வாங்கியது யாரிடம் தெரியுமா? சரத்குமார் முன்னாள் மனைவி சொன்ன சுவாரஸ்ய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி, பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ திரைப்படத்தில் நடித்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிப்புத் துறையில் தனக்கு சிறிதும் அனுபவம் இல்லாத நிலையில் தனக்கு நடிப்பதற்கு டிப்ஸ் கொடுத்தது யார் என்பது குறித்த தகவலை சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் ’எனது குடும்ப நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தான் இந்த படத்தில் நான் நடித்தேன் என்றும் எனது கேரக்டர் மிகவும் சூப்பராக இருந்ததால் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் எனக்கு நடிப்பு தெரியாது என்பதால் நான் என்னுடைய மகள் வரலட்சுமி இடம்தான் நடிப்பு டிப்ஸ் வாங்கினேன் என்றும் அவர் சிங்கிள் டேக் நடிகை என்பதால் எனக்கு பல டிப்ஸ்கள் கொடுத்தார் என்றும் எனது மகளிடமே டிப்ஸ் வாங்கி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
இந்த படத்தின் கதை குறித்தும், என்னுடைய கேரக்டர் குறித்தும், என்னால் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் அதே நேரத்தில் ரசிக்க வைக்கும் கதை என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள்’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com