பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் கருத்து தெரிவிக்காதது ஏன்? சரத்குமார்

  • IndiaGlitz, [Sunday,December 20 2015]

அனிருத் இசையமைத்ததாகவும், சிம்பு பாடியதாகவும் கூறப்படும் பீப் பாடலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: "பெண்ணையோ, பெண் இனத்தையோ தவறாக சித்தரிக்கின்ற, அது படமாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி... அது வரவேற்கத்தக்கது அல்ல என்பது என்னுடைய கருத்து. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் இதேபோன்று பல பாடல்கள் வெளிவந்துள்ள நிலையில் முறைப்படி வெளியிடப்படாத பீப் பாடல்களுக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு ஏன்? என்றும் தெரியவில்லை. இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின்போது, சரத்குமாருக்கு ஆதரவாக இருந்த சிம்பு, அவரது அணியின் சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாயகனாக அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு 3 ஜோடிகள்

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசரின் மகன் லுத்புதின் பாஷா, ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கிய 'சைவம்' மற்றும் 'இது என்ன மாயம்' ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்....

கெடு முடிந்தது. நாளை ரஜினி வீடு முன் போராட்டம். தமிழர் அமைப்பு அறிவிப்பு

எந்திரன் 2' நாயகி எமிஜாக்சன் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை தடை செய்ய கூறியதால் அவரை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழர் அமைப்பு ஒன்று மூன்று நாள் கெடு கொடுத்து எச்சரிக்கை விடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

பீப் பாடல் எதனால் ஹிட் ஆகிறது- சினேகா

சிம்பு -அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை சினேகாவும் தனது கருத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்....

சிம்ரனுக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து

நேற்று வெளியான தனுஷின் 'தங்கமகன்' திரைப்படம் இவ்வருடத்தில் வெளியாகும் 200வது படம் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்யுடன் முதல்முறையாக இணைகிறாரா சூப்பர்ஸ்டார்?

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் விரைவில் விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...