அண்ணாமலைக்கு நள்ளிரவு 2 மணிக்கு போன் பண்ணிய சரத்குமார்.. அதிரடி முடிவெடுக்க என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சரத்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நள்ளிரவு 2 மணிக்கு போனில் அழைத்து முக்கிய முடிவை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்தது என்றும் விரைவில் தொகுதி உடன்பாடு குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென சற்றுமுன் சரத்குமாரின் அரசியல் கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் அரசியல் கட்சி தொடங்கி 17 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார் என்பதும் திமுக, அதிமுக உள்பட பல கட்சிகளுடன் இணைந்து அவர் தேர்தல்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென அவர் தனது அரசியல் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சரத்குமார் கூறிய போது மனைவி ராதிகாவிடம் ஆலோசனை செய்து கட்சியை பாஜகவுடன் இணைத்து உள்ளதாகவும் நள்ளிரவு 2 மணிக்கு அண்ணாமலையிடம் இந்த முடிவை தெரிவித்ததாகவும் கூறினார்.
இதுகுறித்து அண்ணாமலை சற்றுமுன் அளித்த பேட்டியில் சரத்குமார் அவர்கள் தனது கட்சியை பாஜகவுடன் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் என்று இணைந்துள்ளார் என்றும், அவரது வரவு பாஜகவுக்கு கூடுதல் வலிமை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
#WATCH | "இரவு 2 மணிக்கு எனக்கு போன் பண்ணினார்”
— Sun News (@sunnewstamil) March 12, 2024
-சரத்குமார் பாஜகவில் இணைந்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்#SunNews | #AISMK | #Sarathkumar | #BJP | #Annamalai | @realsarathkumar pic.twitter.com/66Hmbg9JYB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com