close
Choose your channels

சிங்கமோ, திமிலங்கலோ, வேட்டைக்காரனை பார்த்ததும் பயப்படணும்: சரத்குமாரின் 'ஹிட்லிஸ்ட்' டீசர்..!

Sunday, August 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது சரத்குமார் மற்றும் அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒவ்வொரு காட்சியும் திரில்லிங்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதும், சரத்குமார் மீண்டும் ஒரு போலீஸ் கேரக்டரில் மிரட்டியுள்ளார் என்பதும் இந்த டீசரை பார்க்கும்போது தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, கெளதம் மேனன், முனிஷ்காந்த், ராமச்சந்திர ராஜு, ஐஸ்வர்யா தத்தா, ரெடின் கிங்ஸ்லி, சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

சூரியக்கதிர் இயக்கத்தில், சத்யா இசையில், ராம்சரண் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதை அடுத்து நிச்சயம் இந்த படம் ’போர் தொழில்’ போலவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment