இணைந்தது இரண்டு தமிழ் நடிகர்களின் கட்சிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இருவரும் தனித்தனியாகவே கட்சி ஆரம்பிக்கவுள்ளனர். ஆனால் இருவரும் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து பல ஆண்டுகளாக அந்த கட்சிகளை நடத்தி வரும் இரண்டு நடிகர்களான சரத்குமார் மற்றும் சீமான் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். தமிழகத்தின் நலன் கருதி பல்வேறு பிரச்சினைகளில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் இணைந்து செயல்படும் என இரு கட்சியின் தலைவர்களான சரத்குமார் மற்றும் சீமான் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் இருவரும் மேலும் கூறியபோது, 'ஜெயலலிதாவை இழந்து அ.தி.மு.க. பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், அதற்கு மாற்றாக தங்கள் கூட்டணி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கென எந்த திட்டமும் இல்லை. என்றும் தனி நபர் வருமான உச்சவரம்பை உயர்த்தாதது வேதனையானது என்றும் தெரிவித்த அவர்கள் இந்த பட்ஜெட் கார்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளதாகவும்
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யாத மத்திய அரசு இனி எஞ்சியிருக்கும் ஒரு ஆண்டில் எப்படி செய்யும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments