சரத்குமார் - ராஜேஷ் எம் செல்வா இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் சரத்குமார் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவான ’இரை’ என்ற தொடரின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் ’இரை’ என்ற வெப்தொடரை கடந்த சில மாதங்களாக இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கி வந்தார் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் ’தூங்காவனம்’ விக்ரமின் ’கடாரம் கொண்டான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் ’இரை’ வெப்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சரத்குமார் நடித்த ’பரம்பரா’ என்ற வெப்தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த வெப்தொடரும் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராஜேஷ் எம் செல்வாவின் முந்தைய திரைப்படங்கள் போலவே இந்த தொடரிலும் த்ரில் கதையம்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வெப்தொடருக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த தொடரின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு இயக்குனராக ஸ்டண்ட் சில்வா பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments