மாலையும் கழுத்துமாக சரத்குமார்-ராதிகா: புகைப்படம் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் குணமானார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கொரோனாவில் குணமாகி திரும்பி வந்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலில் சென்று வழிபாடு நடத்தினார். அங்கு உள்ள கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பதும் பூசாரிகள் பூஜை செய்து அவருக்கு பிரசாதம் கொடுப்பதுமாக காட்சிகள் உடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி இருவரும் மாஸ்க் அணிந்து நிற்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து ராதிகா தனது டுவிட்டரில் காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் கிடைக்க கோவிலுக்கு வந்துள்ளோம். சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அத்தனை மதங்களின் அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கைகூப்பி எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Blessings of #kamakshiammatemple , thank you to all the wonderful souls across all religions who prayed for @realsarathkumar recovery from #COVID20 .Thank you all ???? pic.twitter.com/IZQdIHsUBu
— Radikaa Sarathkumar (@realradikaa) December 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments