இந்தியா-மே.இ.தீவுகள் போட்டியை நேரில் ரசித்து வரும் தமிழ் சினிமா நட்சத்திர ஜோடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகள் மோதும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் எடுத்துள்ளது. தல தோனி 56 ரன்களும், கேப்டன் விராத் கோஹ்லி 72 ரன்களும் அதிரடி மன்னன் பாண்ட்யா 46 ரன்களும் எடுத்துள்ளனர். 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மே.இ.தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றது
இந்த நிலையில் இந்த போட்டியை தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சரத்குமார்-ராதிகா ஜோடி நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். நடிகை ராதிகா இதுகுறித்து புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தூள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
#oldtrafford #CWC19 #INDvsWI watching live ???????????? pic.twitter.com/TlsAKVRC8A
— Radikaa Sarathkumar (@realradikaa) June 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com