3500 கிமீ பயணம்: சரத்குமார்-ராதிகாவின் வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன
அந்த வகையில் சமீபத்தில் தனது மனைவி ராதிகாவுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்
இந்த நிலையில் சரத்குமார்-ராதிகாவின் முதல்கட்ட பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இதுகுறித்து ராதிகா சரத்குமார் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் காரிலேயே நாங்கள் 3500 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் செய்து உள்ளோம். வேலூர், கும்பகோணம், திருச்சி, சமயபுரம், மதுரை, நாகர்கோவில், சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தற்போது வடசென்னையில் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளோம்
நாங்கள் சென்ற இடங்களெல்லாம் மக்கள் எங்களிடம் காட்டிய அன்பு மற்றும் வரவேற்பை கண்டு நாங்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டதாக கருதுகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
3500 kms by car starting in Vellore , Kumbakkonam, Thrichy Samayapuram,,Madurai, Nagarkoil,Salem, Coimbatore and finished in North Madras, meeting cadres and getting them prepared for the coming elections. pic.twitter.com/PoMe0uoHFk
— Radikaa Sarathkumar (@realradikaa) February 3, 2021
Welcomed in Thirunelveli, enroute to Nagercoil ????humbled by the warmth and zeal of the people. pic.twitter.com/kv6ODTObfm
— Radikaa Sarathkumar (@realradikaa) January 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com