3500 கிமீ பயணம்: சரத்குமார்-ராதிகாவின் வீடியோ வைரல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றன

அந்த வகையில் சமீபத்தில் தனது மனைவி ராதிகாவுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்

இந்த நிலையில் சரத்குமார்-ராதிகாவின் முதல்கட்ட பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இதுகுறித்து ராதிகா சரத்குமார் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் காரிலேயே நாங்கள் 3500 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் செய்து உள்ளோம். வேலூர், கும்பகோணம், திருச்சி, சமயபுரம், மதுரை, நாகர்கோவில், சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தற்போது வடசென்னையில் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளோம்

நாங்கள் சென்ற இடங்களெல்லாம் மக்கள் எங்களிடம் காட்டிய அன்பு மற்றும் வரவேற்பை கண்டு நாங்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டதாக கருதுகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

பெண்கள் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தமிழக முதல்வர் செயல்படுத்திய பல அதிரடி திட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரைச் சுற்றும் மர்மம்… நடப்பது என்ன?

2036 வரை ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார் விளாடிமிர் புடின்.

பிப்ரவரி 5ல் ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் படம்!

கடந்த சில மாதங்களாக திரையரங்குகளுக்கு இணையாக ஓடிடியிலும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே

சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்? மபியில் நடந்த பரிதாபச் சம்பவம்!

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் கடந்த 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு சம்பளம் ரூ.55 கோடியா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக மட்டுமன்றி வில்லன் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு இந்தி வெப்தொடர் ஒன்றில் நடிக்க