22 வருட அன்பு பயணம்.. சரத்குமார் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,February 04 2023]

நடிகர் சரத்குமார் இன்று தனது 22 வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் இது குறித்த நெகிழ்ச்சியான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார், நடிகை ராதிகாவை கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்து 22 ஆண்டுகள் ஆனதை அடுத்து சரத்குமார் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் 22 வருடங்கள் எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்ப பயணம், அன்பின் பயணம், புரிதலின் பயணம், தியாகங்களின் பயணம், ஒற்றுமையின் பயணம். இந்த மகிழ்ச்சியான பயணம் அனைத்து வகையான உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும், புகழ்களையும் கண்டுள்ளது.

ஆனாலும் நம் இருவரையும் விதி ஒன்றாக வைத்திருந்தது. நாம் இருவரும் ஒன்றாக பயணம் செய்வதற்கு நம்முடைய புரிதல் மற்றும் தியாகம் ஆகியவையே காரணமாகும். இந்த நல்ல நாளில் எல்லாம் வல்ல இறைவனை நான்பிரார்த்திக்கின்றேன். அவர் எப்போதும் நம்மை ஒன்றாகவும் நம் அழகான குடும்பத்தையும் நாம் எதிர்காலம் முழுவதையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.