ரஜினி சென்ற அதே கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற சரத்குமார்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்ற கோவிலுக்கு நடிகர் சரத்குமார், தனது மனைவி ராதிகா மற்றும் மகனுடன் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபுதாபிக்கு சென்ற நிலையில் அங்குள்ள இந்து கோயிலுக்கு சென்றார் என்பதும் பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த கோவிலை அவர் சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது அதே கோவிலுக்கு நடிகர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா மற்றும் மகன் ஆகியோர் சென்ற வீடியோவை சரத்குமார் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
பிப்ரவரி 14 ஆம் தேதி பிஏபிஎஸ் சுவாமிநாராயண் கோவில் திறக்கப்பட்ட நிலையில், திறப்பு விழாவுக்குப் பிறகு, எனது குடும்பத்துடன் அந்த கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அமைதி மற்றும் நல்லிணக்கம் கொண்ட இந்த ஆலயத்திற்கு நாங்கள் மேற்கொள்ளும் மூன்றாவது விஜயமாகும். நாங்கள் மே 28ஆம் தேதி அந்த கோவிலுக்கு சென்றோம்.
இக்கோயிலில் காணப்பட்ட காட்சிகள், உணரப்பட்ட ஆன்மீக உணர்வுகள், தெய்வீக ஒளி ஆகியவை அமைதியை தருகின்றன. குறிப்பாக அங்குள்ள சுவாமிஜியின் ஆசி பெற்று தெய்வீக தரிசனத்தை முடித்தோம்’ என்று நடிகர் சரத்குமார் பதிவு செய்துள்ளார்.
After the inauguration of BAPS Swaminarayan Mandir on February 14th, I had the opportunity to visit the temple along with my family. The current visit on 28th of this month was our third visit to the temple of peace and harmony.
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) June 1, 2024
The spiritual ideals and divine aura seen and felt… pic.twitter.com/34EU3oqAjh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments